Wednesday, 17 July 2019

இடைவெளி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

உனக்கும் எனக்குமான இடைவெளியில் 
மேசையில் உட்கார்ந்திருக்கின்றன 
சில விவாதங்கள் ...
உன் கனவுக் கோப்பையிலிருந்து 
அவ்வப்போது மது அருந்திக் கொள்கிறாய்... 
உன் விரல்கள் நடுங்கும் போது 
சில வார்த்தைகள் என்னை விழுங்கித் தின்ன... 
நான் மௌனத்தை 
ஒரு குமிழிக்குள் அடைத்து வைக்கிறேன்... 
அதற்குள்ளிருக்கும் சில வண்ணங்கள் 
என் நிறத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது... 
குமிழுக்குள் அழுத்தம் அடர்த்தியாக 
வெடித்துச் சிதறுகிறேன்... 
நீ என்னெதிரில் இறந்து கிடக்கிறாய்.... 
என் மிச்சப்பட்ட வார்த்தைகள் 
அங்கிருந்து அழைத்துச் செல்கையில்... 
உன் விரல்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன. 

- மு. முகமது பாட்சா*
17/07/2019

No comments:

Post a Comment

Popular Posts