
கதவை
நன்றாக அறைந்து சாத்திடுங்கள்...
அறைக்கு வெளியே
சட்டங்களைக் கொண்டு இறுக்க ஆணியால் அறையுங்கள்
என் சப்தம் வெளிவராமலிருக்கச்
சன்னல்களைப் பூசி மெழுகுங்கள்...
வெளிச்சத்தின் வழி எனக்குத் தேவையில்லை
எனக்கு நானே சப்தமிட்டு அலறவேண்டும்...
எனக்கு நானே சப்தமிட்டு அழவும் வேண்டும்..
என் பற்களால் என்னைக் கடித்துக் குதறிக் கொள்வேன்
என் நகங்களால் என் உருப்புகளைச் சிதைத்துக் கொள்வேன்
உங்களுக்கான கோஷங்களை
இங்கு நான் சப்தமிட்டு முழங்குவேன்...
இந்தச் சுவர்கள் எனக்காக அவை திரும்பவும் முழங்கும்...
நீங்கள் எனக்காக இரக்கப் படாதீர்கள்..
அறைக்குள் புழுக்கள் நுழைகின்ற போது..
அறையை அழித்துவிடுங்கள்
அனேகமாக நானிங்கு இறந்து கிடப்பேன்..
- மு. முகமது பாட்சா*
07 /07 /2019
No comments:
Post a Comment