
என் தாத்தாவின் நெருக்கம்
கோடுகளும் குறிகளும் உள்ள
பிரிட்டிஷ் கொடி...
அவர் அப்போது அங்கு
அதிகாரியாக வேலை செய்தார்
என் தந்தையிடம்
மூன்று வர்ணக் கொடி இருந்தது...
அவர் சுதந்திரப் போராட்ட வீரர்...
நான் பிடித்தது செங்கொடி...
என் பேரனின் கைகளில் இப்போது
ஐம்பது நட்சத்திரங்களுடன்
அமெரிக்க ஐக்கியக்கொடி !
- ஆற்றூர் ரவிவர்மா
தமிழ் - முகமது பாட்சா*
No comments:
Post a Comment