
இடையைப் பற்றி எழுதிய கவிதையில்
சொல்லொன்று நழுவுகிறது...
வெட்கத்தைத்
துடைத்துத் துடைத்து எறிகிறாள்
வியர்வைக் கொப்பளிப்பு அடங்காமல்...
தேகத்தில்
நாயொன்று ஊடுருவித் திணற
அதன் நாக்கு
அகலத்தில் எதையோ ஆராய்கிறது....
நூறு எலிகள் பாய்கின்றன...
விரகம் மீசையைத் தடவிக் கொள்கிறது...
புல்லாங்குழல் எரிந்து கொண்டிருக்க
ஒன்பது துளைகளும் மூச்சிரைக்கின்றன....
விருந்தினோரத்தில்
குதறப்பட்ட எலும்புத்துண்டுகளோடு
அவளது ஆடைகள்...
பசி மீண்டும் வயிற்றைப் பிறாண்டியது!
- மு.முகமது பாட்சா*
25/07/2019
No comments:
Post a Comment