
என்னை அறிந்துபோட்டு
கறிகளை நன்றாக அலசிக் கழுவுகிறார்கள்...
உப்புத் தடவுவது
கெட்டு போகாமல் இருக்க என்பது ஆறுதல்..
மஞ்சளைத் தடவிக் காயவைத்தால்
அவ்வப்போது உபயோகித்துக் கொள்ளலாம்
என்ற வாதம் நிகழ்கிறது...
மசாலா வாசம்
எண்ணெய்யில் மிகுக்கும் போது
நான் நன்றாகவே வெந்து கொண்டிருந்தேன்.
- மு. முகமது பாட்சா*
11/07/2019
No comments:
Post a Comment