Wednesday, 10 July 2019

குஜிலி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உட்புறம்

த்தப்பாரு பிகிலு 
சும்மாக்காட்டியும் மெர்சுப் பண்ணாத! 
நாங்கவொன்னும் ஜோப்டாயில்ல... 
உன் பிஸ்கோத்து வேலயெல்லாம் 
வேற எங்காயச்சும் வச்சிக்க... 
அப்பாலிக்கா நிஜாரு அவுந்துடும்னு 
மாரி சப்தமிடவும்... 
காண்டான பிகிலு லுங்கியை 
டவுசருக்கு மேல தூக்கி கட்டிக் கொண்டு 
அட்டு பிகருக்காட்டி 
ஸீன் காட்றல்ல மச்சான் 
எனக்குன்னு ஒருத்தி குந்தியிருக்காடா... 
நீயே சொல்லுவப்பாரு 
உங் குஜிலியைவிட இவ நல்ல பிகருன்னு 
பிகிலு சிரிக்க... 
சாமான் கழுவிக்கினிருந்த சுப்பு 
அவனைப் பாத்து நைஸா கண்ணடிக்க... 
அது தெரியாத மாரி 
இவன் என்ன லூஸாடா ! என்று முறைக்கிறான்... 
அங்கவந்த குஜிலி அடச்சீ வா ன்னு 
மாரியை இஸ்துகினு போகிறாள்.... 
சுப்புவை பாத்து சிரிச்சிகிட்டே!

- மு. முகமது பாட்சா*
10/07/2019

ஓவியம் - இளையராஜா

No comments:

Post a Comment

Popular Posts