
சன்னல்களை அகலத் திறந்துவைத்தாள்
காற்றை நுகர்ந்தால்
இரசனை இழையும் படுக்கை இசைக்கிறது...
கண்களை மூடிக் கொண்டால் இருட்டு
படுக்கையில் மதமதர்ப்பு வழிகிறது...
பெண்ணாக இருக்கும் பகுதிகள்
ஆணின் தேடலைச் சுவாசிக்க நுழைகின்றன...
மூடு பனியின் வாசலில்
கற்பனைகளைக் கோர்த்து மாலையாக்குகிறாள்...
மணமகனாக ஒருவன் நுழைகிறான்
முகம் உரு மாறிக்கொண்டே இருக்கிறது...
அவன் ஈர முத்தம்
வாசனையாக நெஞ்சுக்கூட்டில் நிறைகிறது...
வெட்கம் பெண்ணின் அங்கம்
அதையவன் ஆபரணமென்று முகர்கிறான்..
அழகு அவளை
அவனிடம் விற்றுக் கொண்டிருந்தது...
படுக்கையில் மதமதர்ப்பு வழிந்து கொண்டிருக்க
அவள் இப்போது
எதற்காகவோ அழுது கொண்டிருக்கிறாள்
- மு. முகமது பாட்சா*
09/07/2019
No comments:
Post a Comment