
அந்தக் கதையின் ஆறாம் பக்கத்தைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
யாராவது பார்த்தீர்களா?
அங்கிருந்துதான்
அவள் ஆடைகளைக் கலைந்துவிட்டுச் சென்றாள்
22 ம் பக்கத்தில்
அவளைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் இருக்கிறது
அதற்குப் பிறகு
அவளில்லாமல்தான் கதை நகர்கிறது...
149 வது பக்கத்தில்
அவளை எரித்துக் கொண்டிருப்பவன்
அவளது வெளி நாட்டு மகன்...
மூடிவைத்த பிறகும் அவளில்லாத அந்தக்கதை
உறுத்திக்கொண்டேயிருந்தது
நிமிர்ந்து பார்க்கிறேன்
மாலை போட்ட ஒரு படத்திற்கு
அம்மா என்று பெயர் வைத்துச்
சிறு விளக்கொன்று எரிந்துகொண்டிருந்தது.
- மு. முகமது பாட்சா*
15/07/2019
No comments:
Post a Comment