Thursday, 11 July 2019

காலைகளின் நரக வேதனை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

காலையொன்றும் 
பொன் பூசி அழகாக மலர்ந்திடுவதில்லை... 
எழுந்திருக்கும் போதே இடிக்கும் வாசற்படியை 
எப்படிக் கோபித்துக் கொள்வது? 
கடன் காரன் தட்டும் கதவைக் 
கழற்றி வைக்க இயலாதவன் வீட்டில் 
பால்காரனின் ஹாரனின் சப்தம் கொடூரம்... 
காலையிலேயே 
பேஸ்ட்டைப் பிதுக்கித்தான் 
பற்களைத் துலக்க வேண்டியிருக்கிறது... 
சொட்டு நீர் குளியல் 
சுகம் தருமென்று யார் எழுதி வைத்தார்கள்? 
'ஏங்க...! வரும்போது...' என்பதில் 
ஒரு நீண்ட கடன் பட்டியல் ஓடும்... 
மூளையைக் கழற்றி வைத்துவிட்டு 
வண்டியை ஓட்டுவது மிகவும் கொடுமை... 
இதிலும் ஓர் ஆறுதல் 
வீட்டிற்குள் நுழைந்து எதையாவது கொறிக்கும் 
கொறிணிக்குத் தெரியாது 
இந்தக் காலைகளின் நரக வேதனை.

- மு. முகமது பாட்சா*
12/07/2019

No comments:

Post a Comment

Popular Posts