
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...
எனது தேசத்தில் நானில்லை ..
இதுதான் என் தேசம் என்று கட்டமைக்கிறீர்கள்!
என் கால்களின் மொழியை
அறியாத காலணிகளை அணிந்திருக்கிறேன்...
எனக்கான கல்வி உயரத்தில் தொங்குகிறது....
பீட்ஸா கடைகளில் தோசை கிடைக்கவில்லை
நீருக்கான அரசியலில்
உப்புக்கான விலையை மறந்தேவிட்டேன்...
சைனாவோடு
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்...
அன்னிய மணம் தடவிக் கொள்கிறேன்...
சுதேசிகளின் கைத்தடிகளில் அமெரிக்க முத்திரை!
பிரான்சின் மது போத்தல்களில்
ஆடைக் கட்டிக் கொள்கிறது சுதந்திரம்...
சவப்பெட்டிக்கு
அமேசான் ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய விளம்பரம்...
மாட்டிறைச்சி - மனிதர்களைச் சாப்பிட்டு ஜீரணிக்க
பீப்பர்க்கர்
எளிதாகக் கிடைக்கிறது நட்சத்திர விடுதிகளில்...
ஜெய் ஹிந்த் சொல்வதற்கு
எதற்காக
ஜெய்ஸ்ரீ ராம் தெரியவேண்டும்.... ?
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...
- மு.முகமது பாட்சா*
24/07/2019
No comments:
Post a Comment