Friday, 19 July 2019

கழிவறைச் சுவர்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
அந்தக் கழிவறைச் சுவர்கள் 
தங்களைக் கழுவிக் கொண்டதேயில்லை... 
முதலில் வெள்ளை அடித்திருந்த போது 
மூக்கை மூடி கண்களைக் கட்டிக்கொண்டது... 
போவோர் வருவோரெல்லாம் 
பான்பராக்கின் எச்சில்களைத் துப்பிய போது 
விழுந்துவிடாமல் கடைகால் பிடித்துக் கொண்டது... 
சிலர் அதனிடம் 
குறைகளைச் சொல்லியழுதபோது 
தாமொரு பயனுரு என்று நினைத்தது... 
சிலர் கெட்டகெட்ட வார்த்தைகளால் திட்டிய போது 
காதுகள் இறந்துவிட்டன... 
சிலர் கைகளைக் கொண்டு சுகம் புணர்ந்தார்கள் .... 
கண்கள் அழுக்கானது... 
அஃது இப்போது ஒரு சித்திர கூடமாகவே மாறியது... 
ஆபாச சித்தர்கள் வரைபடங்கள் வரைந்து 
புணர்வியல் இலக்கணம் எழுதினார்கள்... 
அவனோ அவளோ அடிக்கடிக் கற்பழிக்கப் பட்டார்கள்... 
விந்துகளை வீசிவிட்டு அவர்கள் 
வெளியில் செல்லும் போது 
உயிரணுக்கள் சுவரில் மோதி இறந்துக் கிடந்தன... 
அது மட்டும் 
அவர்களின் அந்தரங்கத்தைத் 
தெளிவாகவே வாசித்துக் கொண்டிருந்தது....

- மு.முகமது பாட்சா*
18/07/2019

No comments:

Post a Comment

Popular Posts