Tuesday, 2 July 2019

நுண்புனை கதைகள் - மகன்


நுண்புனை கதைகள்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
மகன்

அவன் நிச்சயம் நன்றாகப் படித்தவனாகத்தான் இருக்க முடியும். 
சற்று அழகாகவும் இருந்தான். அவனைவிடவும் அவன் மகன் இன்னமும் 
அழகாகஇருந்தான். அப்பாவுடன் பைக்கில் வருவதென்றாலே 
பிள்ளைகளுக்குத் தனிக் குஷி. பைக்கை ஒரு கடையின் முன் நிறுத்தினவன் 
'இதோ அப்பா மருந்துவாங்கிட்டு வந்திடறேன்' என்ற போனவன் 
பிராந்தி பாட்டிலை ஒரு பேப்பரில் சுற்றி எடுத்துவந்து 
டேங் கவரில் வைத்தான். பிறகு, 'செல்லத்திற்கு என்னவேணும்' என்று 
மகனிடம் கேட்டவனை, சற்று நேரம் கண் இமைக்காமல் பார்த்தவன்... 
கண்களிலிருந்து சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கன்னத்தில்வழிய.., 
'எனக்கு நீ மட்டுந்தாம்பா வேணும்' என்றான்.

- முகமது பாட்சா*
02/07/2019

No comments:

Post a Comment

Popular Posts