Monday, 1 July 2019

ஆடியின் சில்லுகள்


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 

எதிரில் நின்று கொண்டிருந்தவன்
அத்துணை அடர்த்தியானவன் இல்லை...
அவன் முகம்
பூனையை ஒத்ததாகவும்
விரல்கள்
புலியை ஒத்ததாகவும் இருந்தன...
முகத்தைக் கழுவிக்கொள்கிறேன்
நாயொன்று
எதிரில் வாலாட்டிக் கொண்டிருக்கிறது......
சிரிப்பை ஒட்டி வைத்தேன்
குரங்காட்டி நின்று கொண்டிருந்தான்...
என்னை உடைப்பதைத் தவிர
வேறு வழித் தெரியவில்லை...
ஆடியின் சில்லுகள் 
என்னை அருவெறுப்போடு பார்க்கின்றன.

- மு. முகமது பாட்சா*

01/07/2019

No comments:

Post a Comment

Popular Posts