Tuesday, 30 July 2019

லட்சுமணக்கோடு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சீதையை வருத்திய லட்சுமணக்கோடு 
நீண்டுகொண்டே செல்கிறது.... 
அகலிகையின் சாபம் இணையும் புள்ளியில் 
மாரீச மோட்சம் 
மானின் அம்பை பிடுங்கியெறிய... 
விழுந்த இடத்தில் சூர்ப்பனைகையின் துயரம் 
தொட்டுத் தொடர்கிறது அசோகவனத்தில்.... 
நிழலில்லாத் தகிப்பில் 
ஜானகி மிதிலையைத் தேடுகிறாள்.... 
'பார்த்து நடந்துக்க... 
இனி எல்லாமே புகுந்த வீடுதான்' 
என்று சொல்லும் அப்பாவின் விரல்கள் 
ஒரு நீண்ட கோட்டை வரைந்து செல்ல...

- மு.முகமது பாட்சா*
30/07/2019

No comments:

Post a Comment

Popular Posts