Tuesday, 9 July 2019

மாய வேலிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

என்னைச் சுற்றிலும் 
சுவர்கள் இல்லையென்றாலும் 
கம்பிகளின் வேலி இருக்கிறது... 
என்னை எனக்குள் வைத்து 
அடைத்து வைத்திருக்கிறார்கள் 
வெளியேற வேண்டும் என முயற்சிக்கிறேன் 
இல்லாத சங்கிலி கால்களை இழுக்கிறது... 
எனக்குள்ளிருக்கும் ஆடு 
மேய்ச்சல் நிலத்தைப் பார்வையிட... 
வேலித் தாண்டி விரைகிறேன்... 
மேய்ப்பன் துறட்டிக் கோலோடு ஓடி வருகிறான்... 
நானிப்போது 
எனக்குள்ளிருக்கும் பூனையை எழுப்பிப் 
பதுங்குகிறேன்... 
எலியொன்று சிரித்துவிட்டுப் போகிறது... 
நானிப்போது 
எதுவாக மாறவேண்டுமோ அதுவாகவே 
நிறையபேர் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்... 
எனக்குள் என்னை - நானே 
இப்போது பூட்டிக் கொள்கிறேன்... 
என்னைச் சுற்றிலும் 
மின்சாரக் கம்பிகளின் வேலி இருக்கிறது.

- மு. முகமது பாட்சா*
08/07/2019

No comments:

Post a Comment

Popular Posts