Wednesday, 10 July 2019

அவர்கள் வரும்போதே


அவர்கள் வரும்போதே 
பாப்லோ நெருடாவோடுதான் வந்தார்கள் 
கை குலுக்கியவர் 
என்னைப் பார்த்திருக்கிறாயா? என்றார் 
கண்ணாடியைப் பார்ப்பதில்லை என்றேன் 
ஏதோவொன்று விளங்கியிருக்க வேண்டும் 
சிரித்தார்... 
கீட்ஸின் தோளில் சாய்ந்து கொண்டே 
ஒருவன் வந்தான்... 
கீட்ஸின் கண்கள் பேனி ப்ரவுனையேத் 
தேடிக் கொண்டிருந்தது.... 
சம போதை! 
ப்ளாத்தின் கவிதையில் வழுக்கி விழுந்தவன் 
'நீ அருமை' என்றான் 
அவள் விட்ட அனல் மூச்சில் 
கார்பன் மோனாக்சைடு நகைத்தது... 
எழுத்துகளை விற்பவன் 
சந்தையில் நின்று கூவிக்கொண்டிருந்தான்... 
என் எழுத்துகள் 
என்னைத் தனியாக அழைத்துச் செல்கின்றன.

- மு.முகமது பாட்சா*
09/07/2019

No comments:

Post a Comment

Popular Posts