
ஒட்டகத்தைக்
கட்டி போட்டுவிட்டு
இந்தக் கவிதையை எழுதுகிறேன்...
ஒட்டகம் அலைந்துகொண்டே இருக்கிறது
என்னை மேய்த்துக்கொண்டு..
கூடாரத்தை நன்றாக மூடி வைத்துவிட்டு
ஒட்டகத்துடன் படுத்திருக்கிறேன்
திமில்கள்
உரசிக்கொண்டே இருக்கின்றன...
ஒட்டகத்தின் மீது
எறும்பொன்று சவாரி செய்து கொண்டிருக்கிறது
ஒட்டகத்திற்குத் தெரியுமா?
ஒட்டகம் என்னை அருந்துகிறது
நான் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
பாலைவனத்தைச்
சுருட்டி வைத்துவிட்டு
கூடாரத்திற்குள் நுழைகிறேன்...
ஒட்டகத்தைக் காணவில்லை!
- மு. முகமது பாட்சா*
29/07/2019
No comments:
Post a Comment