Tuesday, 2 July 2019

முல்லாவை காணவில்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் தொப்பி

முல்லாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் 
கழுதையோடு காணாமல் போய்விட்டதாகப் 
பிராது பதிவாகிறது.. 
கழுதை அவருடையதுதான் என்றாலும் 
கட்டியிருந்த கயிறு கடன் வாங்கியது... 
கயிறுதானே என்று கேட்கலாம் 
அஃதொரு ஒட்டகத்தைக் கட்டியிருந்த கயிறு 
அதனால்? 
ஒட்டகம்தான் இப்போது ஓடிவிட்டதே..... 
ஒட்டகத்தைத்தானே தேட வேண்டும் ? 
அதைக் கட்டிப்போடக் கயிறு வேண்டுமே... 
ஒட்டகம் யாருடையது? 
அமைச்சரின் வைப்பாட்டி உடையது 
அவளிடமே கேட்க வேண்டியதுதானே...? 
அதற்கும் கூட முல்லா கிடைக்கவேண்டும்...
ஏன்?
முல்லா காணவில்லையென்று
பிராது கொடுத்தவளே அவள்தான்...

-மு. முகமது பாட்சா*
02/07/2019

No comments:

Post a Comment

Popular Posts