
நிழல் தன்னை விரித்துப் படுத்துக் கொள்கிறது
அதில் சில நிஜங்களை
நிரப்பிச் சுருட்டிக் கொள்கிறேன்
அகன்னம் பூசியக் காதுகள்
ஆங்காங்கே உலாவுகின்றன
விழிகளிருந்தும் பிச்சையெடுக்கிறான்
விழிகளில்லாதவன்
கர்வம் தலைவலிக்கான தைலம்
அதிகம் பூசினால் புண்ணாகி விடுகிறது
அடிமை வாழ்க்கையை
அரசியல்தான் கற்றுத் தருகிறது
போராடுகிறவன் சிறைக்குச் செல்கிறான்
ரவுடியென்றாலும்
மன்னனுக்கு விசுவாசமாகவேயிரு
நீதி கிடைக்காதவிடத்திற்குத்தான்
நீதிமன்றம் என்று பெயர் வைக்கிறார்கள்..
இன்னமும் நீரோ
பிடில் வாசித்துக் கொண்டேதானிருக்கிறான்
உவமை மட்டும் இங்கு மாறவேயில்லை
ஆலயங்களின் கதவுகள் மூடப்பட்டாலும்
பக்தர்களின் மனசு
வலிகளோடு திறந்தேதான் கிடக்கிறது
நிஜங்கள் கனக்கின்ற போது
நிழல் எப்போதும் குளுமைத் தருவதில்லை....
என் நிழலோடு நடப்பதற்குப் பழகிக் கொள்கிறேன்
கனவுப் பந்தலில் இனி காய்ப்பதை
நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்.
- மு.முகமது பாட்சா*
03 /05 /2018
நண்பர் ஶ்ரீ வத்ஸா அவர்களின் சிறப்பான ஆங்கில மொழியாக்கம்
The shadow spreads itself and lays down
I fill with some truths and roll it up
Deaf ears
loiter around
Despite having eyes
he begs for alms
the sightless
When the balm for headaches
is over applied
pride gets injured
Only politics teaches
a life of slavery
The one who struggles
goes to jail
Even if a ruffian
be loyal to the King
The place from which justice is unavailable
is called the court
Nero is still
playing the fiddle
Metaphors have not
changed here at all
Even if temple doors
are closed
the minds of the devoted
remain open in pain
When truths weigh down heavily
shades are never cool
I will rehearse walking with my shadow
You can pluck whatever hitherto will grow
in the dream canopy
~Sri 17:25 :: 03.05.2018 :: Noida
No comments:
Post a Comment