சூட்டு வெளியின் வெப்பம் தாங்கி
கல்லின்,முள்ளின் காயம் வேய்ந்து
கால்களைக் காத்த காவலை மறந்து
கழற்றி விட்டார்கள் வாசலின் வெளியே
நான்; "தீண்டத் தகாதவன்!" என்று
ஆனாலும்
மூட நம்பிக்கையின் முக்காடு போட்டு
பகலில் கழற்றி வைத்த என்னை...
இரவில் காவலுக்கும் வைத்தார்கள்
படுக்கையின் முன்பாக!
பேய்,பிசாசுகள் என்னைக் கண்டால்
ஓடி விடுமாம்?
தீண்டத் தகாதவன் நானென்ற
மாய பிம்பம் தாங்கி!
-மு.முகமது பாட்சா*
08/05/2016
No comments:
Post a Comment