Sunday, 6 May 2018

மாணவர்கள்

நீங்கள்...
நாளைய
நம்பிக்கை விதைகள்!

தேசத்தின்
பயன் தரு விருட்சங்கள்!

தேர்வுகள்
உங்களை செதுக்குவதில்லை!
திறமைகளே 
உங்களை மதிப்பிடுகின்றன!

தோல்விகள் கூட
வெற்றியின் படிகள்தான்!

தோல்விகளை கண்டு
துவண்டு விடாதீர்கள்...

ஜனனம் கூட
வலியில்தான் நிகழ்கிறது!

உனது வெற்றியை
நீதானே நிர்ணயிக்க வேண்டும்...

தோல்வியைக் கண்டு
துவண்டுப் போனவன்
கோழையாகத்தான் சாகிறான்!

நீதான் இருளின் விளக்கு!
துணிந்து நில்...!-இனி
உனக்கில்லை சறுக்கு!

-மு.முகமது பாட்சா*
06/05/2015

No comments:

Post a Comment

Popular Posts