Sunday, 6 May 2018

கருப்புச் சிம்னி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம்

ஒருவன் விளக்கிற்கு 
கருப்புச் சிம்னியை மாட்டிவிட்டு 
இதுதான் அழகு என்கிறான் 

காடுகளைக் கொளுத்திவிட்டு 
அவர்கள் குளிர் காய்கிறார்கள்... 
அலைகளைப் பிடித்துவந்து 
நாம் அவர்களுக்குச் சாமரம் வீசுகிறோம் 

அடிக்கப்பட்ட கற்களையெடுத்து 
ஆயுதம் செய்வதை விடுத்து 
வீடு கட்டுவதால் 
என்ன பயன் விளைந்துவிடப் போகிறது? 

சுரணையற்றவன் சூட்சமம் செய்தால் 
உமிழ்வதற்கு 
எச்சில் கூடவா நம்மிடம் இல்லாமல் போனது? 

பயம் எப்போதுமே பதுங்கித்தான் கிடக்கிறது 
பாய்வதற்காகத்தான் 
புலிகள் என்றும் தயாராக நிற்கும்... 

இனியாவது வேல் கம்புகளை எடுங்கள் 
காந்தியின் கைத்தடி 
இன்னமும் கவிழ்ந்தேதான் கிடக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
06 /05 /2018 

No comments:

Post a Comment

Popular Posts