
எழுத்துக் கூட்டிப் படிக்கக் கூட
எங்களால முடியல!
பறையடிக்கும் அப்பனுக்கோ
பாடமொன்னும் புரியல!
சொல்லித் தரும் வாத்திக்கோ
தொட்டுப் பேசப் புடிக்கல!
"படிச்சி யென்ன ஆவப் போற?"
நக்கலுக்கும் குறைவில்ல!
சாதியின்னும் பேதியின்னும்
சொல்லுறதுப் புரியல!
சாதிக்க நெனச்சாலும் - இங்க
சாத்துக்கழிச் சரியில்ல!
விளக்குக் கூட எங்களுக்கு
ஒழுங்காதான் கிடைக்கல!
வீதியில நடந்து போனா
நாத்தப் பார்வைப் புடிக்கல!
நாடுவிட்டு நாடுபோக
எங்களுக்கும் தெரியல!
சோத்துக்கும்தான் வழியில்ல
படிப்புக்கும்தான் சுகமில்ல...
சோதனைக்குப் பொறந்த கூட்டம்
சாதிக்கத்தான் வழியில்ல!
- மு.முகமது பாட்சா*
07/05/2016
No comments:
Post a Comment