Saturday, 5 May 2018

கடவுள் கண்களை மூடிக் கொண்டார்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

கடவுள் கண்களை மூடிக் கொண்டார் 
சாத்தானின் வாசல் திறக்கப்பட்டிருக்கிறது 
அர்ச்சனைச் சீட்டுகள் ஏழ்மையை 
அடையாளம் காட்டுகின்றன 
உண்டியல் பணம் அத்துணையும் உத்தமமல்ல 
வரிசையில் நிற்கும் பிரார்த்தனைகள் 
காகத்திடம் சில கருத்துகளைக் கேட்கலாம் 
வளாகத்தின் மரங்களில் 
கடவுளின் கருணை நிழலாக வழிகிறது... 
தவித்த வயிற்றிற்குள் விழாத தண்ணீர் 
சாக்கடையில்தான் கலந்தால் என்ன? 
காலண்டரின் கடவுள்களை மட்டுமே 
தீட்டுகள் என்றும் அண்டுவதில்லை... 
உண்மையான நேர்ச்சைக்காரன் 
ஏழைகளுக்கு மட்டுமே சாப்பாடு போடுகிறான் 
சிந்தியதை எடுக்கும் பறவைகள் 
கடவுளை பற்றிச் சிந்திப்பதேயில்லை... 
வேட்டுவனின் வேண்டுதலில் 
உயிர் ஒளிந்திருப்பது தெரிந்திருக்கலாம்.. 
கடவுள் தன் கண்களை மூடிக் கொண்டார் 
சாத்தானின் வாசல் திறக்கப்பட்டிருக்கிறது 

- மு.முகமது பாட்சா*
05 /05 /2018

No comments:

Post a Comment

Popular Posts