
இந்தக் கவிதையை
எந்த நூற்றாண்டில் கொண்டுபோய்
புதைக்கப் போகிறீர்கள்?
இன்னமும்
கஜினி படையெடுத்துக் கொண்டேயிருக்க...
ஔரங்கசீப்பை
விரட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்...
ஆதார் கார்டுகளுக்கு
கண்களைப் பொருத்திவிட்டு....
ஆதிகாமத்திற்குள் நுழைந்திருக்கிறது
வேதாகமம்...
எனது கழுத்தை வெட்டி
உங்களுக்கு விருந்தளிக்கிறேன்...
நீங்கள் ஈரலின் ருசியோடு
நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கிறீர்கள்...
என் எலும்புகளின் மஜ்ஜையில்
நீங்கள் தேடிக் கொண்டிருப்பது...
ஒரு மதத்தின் வரலாறு.
- மு. முகமது பாட்சா*
29/06/2019
No comments:
Post a Comment