ஒதுவீராக! - ரமலான் 24

வாசிக்கத் தெரியாதவன்
வசிப்பிடம் தேடி அலைகின்றான்...
ஞானம் தேடியலைகின்ற சூஃபிகளிடம் கேளுங்கள்
கற்றுக் கொண்டிருக்கிறேன்
என்றே சொல்வார்கள்....
ஓதுவீராக!
ஓதாத நபி ஸல் முகம்மதுவிற்கு
இறைவன் கட்டளையிட்ட முதல் வரி...
அடிமை பட்ட வீரர்களிடம்
நபிகள் விதித்த நிபந்தனை
கற்றவர்கள் கற்பித்து விடுதலையாகலாம்...
பொருளறியாது வாசிப்பவன்
புழுக்கத்தில்
சுவனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்...
இங்கு யாரும்
அறிவு ஜீவிகளென்பது கிடையாது...
அப்படிச் சொன்னால் பொய்யர்கள்...
நாடோடியின் கேள்விக்கே நாணி நிற்பவர்கள்...
நன்றாக நடிக்கிறார்கள்...
பள்ளிகள் தொழுகைக்கு மட்டுமல்ல
ஓதுவதற்கான கல்விக் கூடமும் அதுதான்...
நூலகங்கள் இல்லாத பள்ளிகள்
நூலாம்படை கட்டிய வீடுகள்...
ஓதுவீராக!
- மு.முகமது பாட்சா*
01/06/2019

வாசிக்கத் தெரியாதவன்
வசிப்பிடம் தேடி அலைகின்றான்...
ஞானம் தேடியலைகின்ற சூஃபிகளிடம் கேளுங்கள்
கற்றுக் கொண்டிருக்கிறேன்
என்றே சொல்வார்கள்....
ஓதுவீராக!
ஓதாத நபி ஸல் முகம்மதுவிற்கு
இறைவன் கட்டளையிட்ட முதல் வரி...
அடிமை பட்ட வீரர்களிடம்
நபிகள் விதித்த நிபந்தனை
கற்றவர்கள் கற்பித்து விடுதலையாகலாம்...
பொருளறியாது வாசிப்பவன்
புழுக்கத்தில்
சுவனத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்...
இங்கு யாரும்
அறிவு ஜீவிகளென்பது கிடையாது...
அப்படிச் சொன்னால் பொய்யர்கள்...
நாடோடியின் கேள்விக்கே நாணி நிற்பவர்கள்...
நன்றாக நடிக்கிறார்கள்...
பள்ளிகள் தொழுகைக்கு மட்டுமல்ல
ஓதுவதற்கான கல்விக் கூடமும் அதுதான்...
நூலகங்கள் இல்லாத பள்ளிகள்
நூலாம்படை கட்டிய வீடுகள்...
ஓதுவீராக!
- மு.முகமது பாட்சா*
01/06/2019
No comments:
Post a Comment