Thursday, 27 June 2019

இரகசியக் குறிப்புகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஏடுகளில் எடுத்துவைத்திருந்த 
இரகசியக் குறிப்புகள் 
ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. 
ஒக்க நில்லாதவொழுக்கம் 
நக்கனாய் நடந்து போகிறது... 
மிக்கன் மிலேச்சனகாவே வாழ்கிறான்... 
தக்கன் தகையோர் சான்றளிக்க 
சாத்துவிகம் பேசுகிறான்... 
பட்டன் பஞ்சத்தில் வார்த்தைகளை 
பட்டினியில் தோய்த்தெடுக்க... 
ஏடுகளில் எடுத்து வைத்திருந்த 
இரகசியக் குறிப்புகள் 
ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. 

- மு. முகமது பாட்சா*
27/06/2019

No comments:

Post a Comment

Popular Posts