Friday, 14 June 2019

காதல் பக்கிர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் இசைக்கருவிகளை இசைக்கின்றனர் மற்றும் இரவு

என் உதடுகளின் வரிகள் 
உன் கவிதைகளால் நனைகின்றன... 
எனக்குள்ளிருந்த ஒருவனை 
நீ மீட்டெடுத்துச் செல்கிறாய் 
என் சுதந்திர வெளி 
உனது அன்புச் சங்கிலியால் 
பிணைக்கப்பட்டிருக்கிறது.. 
தேடல்களின் பேகம்ஜான் நீ 
நான் அடிமையாகவே வாழ்கிறேன்... 
என் பொய்களுக்கு 
நீதான் முலாம் பூசுகிறாய்... 
உன் சந்தன வார்த்தைகளைப் பூசிக்கொண்டு 
ஊர்வலம் போகிறேன்... 
எனக்கான வெள்ளைக்கொடியை 
ஏந்தி நிற்கிறது 
நமக்கான காதல் கம்பம் 
தப்ஸினோசையில் அதிரும் நரம்புகளில் 
நீ ஆவர்த்தனம் கூட்டுகிறாய்... 
மயக்க வார்த்தைகளில் 
நான் மதுரம் தேடிக் கொண்டிருக்கிறேன்... 
உங்களில் யாருக்கும் தெரியும் 
நானொரு காதல் பக்கிரியென்று... 

- மு.முகமது பாட்சா* 
15/05/2019 

No comments:

Post a Comment

Popular Posts