
இந்த உலகம்
மிகவும் சிறியதாக இருக்கிறது...
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்
உயிர் பறவையின்
பறத்தலின் தூரம் அத்துணை அதிகமில்லை...
தேக்கி வைத்த ஆசைகளின் கழிவு
பூமி முழுவதும்
எச்சங்களாக நிறைந்திருக்கின்றன...
துவேசங்களைப் போர்த்திக்கொண்டு
ஒட்டு மருவோடு நடக்கிறோம்...
ஆளுக்கொரு மதம்
நம்மை இழுத்துக் கொண்டு உருள்கிறது...
மன்னனென்பவன்
மக்கிப்போன எலும்புக்கூடு...
செத்துப்போன எலிகளை
சவப்பெட்டிகள் கூட தங்கவைப்பதில்லை
தங்கப் பஸ்பம் என்ன செய்யும்?
நான் இருக்கிறேன் என்ற சொல் மட்டும்
உயிர் வாழ்கிறது...
கூடடைவு என்பதும்
விடியும் வரை நிகழும் மரணம்தான்...
இந்த உலகம்
மிகவும் சிறியதாகவே இருக்கிறது...
- மு. முகமது பாட்சா*
26/06/2019
No comments:
Post a Comment