
அவர்களின் பிரபஞ்சம்
எப்போதும் விசித்திரமாகவே இருக்கிறது
நுனி நாக்கில்தான் பேசுகிறார்கள்
கையுறைகள் கூட புதிதாகவே இருக்கின்றன
புன்னகையில் விஷமம் இருக்கும்
கால்கள் தரையில் பாவாது...
கைத் தட்டினால்
கடவுளும் அருகில் வந்து விடுகிறார்...
பணத்தின் வாசனை
அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது...
அவர்களின் துப்பாக்கிகளும்
பணத்தாள்களால் செய்யப்பட்டிருக்கின்றன...
மன்னன் குனிந்து வரவேற்கிறான்
ஆனாலும் அவர்களைச் சுற்றி
சில டாட் கள் கூடவே ஒட்டி வருகின்றன...
அவை ஜிம் பாய்களாக இருக்கலாம்...
துப்பாக்கி ரவைகளாக இருக்கலாம்
பாதிக்கப்பட்டவர்கள்
துப்பிய எச்சில்களாகவும் இருக்கலாம்... அல்லது
பிணவறையில் மேயும்
புழுக்களாவும் கூட இருக்கலாம்.
- மு.முகமது பாட்சா*
13/06/2019
No comments:
Post a Comment