
ஓர் அந்திமகாலத்தின்
அருகில்தான் அவரைப் பார்த்தேன்
அவர் தன்னைக்
கடவுள் என்று சொல்லிக் கொண்டார்
எனக்குத்தான் பார்வைக் குறைவு
அவர் முகம் தெரியவில்லை
விளக்கிலொட்டாத தீபம் போல்
ஆடிக் கொண்டேயிருந்தார்...
குரல் மட்டும்தான் கேட்டது
உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்
என்ன கேட்பது
அதே கேள்வியைத் தான்
நானும் அவரிடம் கேட்டேன்...
அவர் சிரித்திருக்கவேண்டும்
மின்னல் வெட்டியது
மழை வரும் போல் இருந்ததால்
ஒரு குடை கேட்கும் அறிவு கூட இல்லாமல்..
ஒதுங்கிக் கொள்ள
இடம் தேடிக்கொண்டிருந்தேன்
அவராவது கொடுத்திருக்கலாம்
என்னிடம் என்ன தேடினார் என்பது
எனக்கென்ன தெரியும்?
- மு.முகமது பாட்சா*
10/06/2019
No comments:
Post a Comment