இரவு - ரமலான் 23

'இரவு என்பது மிகவும் நீளமானது'
சொல்வது அரபிய மொழி...
பயணங்களைச்
சுகமாக்குகிறது நீண்ட இரவு
'இரவு' வெள்ளியால் நெய்யப்பட்ட
கருப்புப் பட்டாடை
ஒரே நேரத்தில்
அதிகம் பேர் தவம் செய்வது
இரவில் மட்டும்தான்
இரவிற்கு ஆயிரம் கண்கள்...
இரவிற்குச் சுட்டெரிக்கத் தெரியாது...
இறைவனின் நிழல்
இரவாகத்தான் இருக்க முடியும் ...
இரவு ஒரு காதல் தேசம்...
இரவை யாரும் அதிகம் வாசித்ததில்லை
நிறபேதம் பார்ப்பவன்
இரவில்தான் கண் மூடி உறங்குகிறான்...
திருமறையின் இரவு
லைலத்துல் கத்ராக ஒளிர்கிறது....
இரவின் தொழுகையில்
இதயம் சஜ்தாவில் கிடந்து அழும்...
- மு. முகமது பாட்சா*
31/05/2019

'இரவு என்பது மிகவும் நீளமானது'
சொல்வது அரபிய மொழி...
பயணங்களைச்
சுகமாக்குகிறது நீண்ட இரவு
'இரவு' வெள்ளியால் நெய்யப்பட்ட
கருப்புப் பட்டாடை
ஒரே நேரத்தில்
அதிகம் பேர் தவம் செய்வது
இரவில் மட்டும்தான்
இரவிற்கு ஆயிரம் கண்கள்...
இரவிற்குச் சுட்டெரிக்கத் தெரியாது...
இறைவனின் நிழல்
இரவாகத்தான் இருக்க முடியும் ...
இரவு ஒரு காதல் தேசம்...
இரவை யாரும் அதிகம் வாசித்ததில்லை
நிறபேதம் பார்ப்பவன்
இரவில்தான் கண் மூடி உறங்குகிறான்...
திருமறையின் இரவு
லைலத்துல் கத்ராக ஒளிர்கிறது....
இரவின் தொழுகையில்
இதயம் சஜ்தாவில் கிடந்து அழும்...
- மு. முகமது பாட்சா*
31/05/2019
No comments:
Post a Comment