
என்னைச் சுற்றிலும்
சில ஓவியங்களும் எழுத்துகளும்
சிதறிக் கிடக்கின்றன...
அவை தங்களையே வார்த்தைகளால்
சுயம் புனைந்து கொண்டவை
அதில் அழுக்கான ஓவியங்களும்
ஆடம்பரமில்லாத எழுத்துகளும் கூட அடக்கம்...
அங்கத மொழிகளில்
நையாண்டிச் செய்யும் சித்திரங்களை
சில வார்த்தைகள் இரசிக்கின்றன...
கடை வீதிகளும்
என்னை வார்த்தைகளால்
மொய்த்துக் கொள்கின்றன....
பைகள் நிறைய
வார்த்தைகளை அள்ளி வருகிறேன்
வீட்டிற்குள்ளிருந்த ஓவியம்
என்னை விசித்திரமாகப் பார்க்கிறது
கடவுச் சொல் இல்லாத கணினிக்குள்
சில வார்த்தைகள் நுழைந்திருக்கின்றன
நானென்பது ஓவியமா? வார்த்தையா?
ஞாயிற்றுக் கிழமையின் வெறுமையாய்
சூடாறியத் தேநீரில்
ஓவியமான பாலாடையை இரசித்துக் கொண்டிருக்க...
முதன் முறையாகச்
சன்னலைத் திறந்து ஒரு பாட்டு உள்ளே நுழைகிறது.
- மு.முகமது பாட்சா*
16/06/2019
No comments:
Post a Comment