
உன் பார்வை வெளி
மிகவும் விசாலமாகவே இருக்கிறது
அதிலிருந்து நான்
எப்படித் தப்பித்துக் கொள்வது?
என் கழுத்துக்கீழே விழுந்த அம்புகளை
வெட்கத்தைக் கொண்டு பொறுக்குகிறேன்
என்னாடைகள் கிழிந்திருக்கின்றன...
மானசீகனாய்
அதரங்களைக் கடித்துக் கொய்தபோது
தெரித்தெழுந்த புண்களை எப்படியாற்றுவேன்?
உனக்குள் நுழைந்து நான்
போராடிக் கொண்டிருக்கிறேன்...
என் வெட்க ஸ்தலத்தை நீ வேர்த்துப் புணர்கிறாய்...
கட்டவிழ்ந்திருக்கும் மதயாணை முன்பு
மகிழம் தோட்டம் மரணமெய்வது போல்
என் தேகம் சிதறிக்கிடக்கிறது...
நீ பசியோடுவே புன்னகைத்து விடைபெறுகிறாய்..
நானும் சற்றேறக்குறைய
அப்படித்தான் உள் காயங்களுடன்.
- மு.முகமது பாட்சா*
11/06/2019
No comments:
Post a Comment