Monday, 3 June 2019

மௌனமாக

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம், உணவு மற்றும் தண்ணீர்

மௌனம் அமர்ந்திருந்த இடத்தில் 
புற்கள் முளைத்திருக்க.... 
காற்று வருவதற்காகப் 
போதி மரமொன்று நடப்பட்டது... 
பறவைகள் கூடு கட்டியதால் 
புல்லாங்குழலிசைக்க 
மூங்கில்கள் வளர்ந்தன... 
அமைதியைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் 
வரத் தொடங்கினார்கள்... 
கடைகளும் அதிகமாயின... 
சிறப்புச் சொற்பொழிவுகளால் 
ஆலயம் எழுப்பினார்கள்... 
அமைதியை வாங்கக் 
கூட்டம் அலை மோதியது... 
ஆனாலும் அவர்களுக்குத் தெரியாதவொன்று 
அமைதி அங்கிருந்து வெளியேறியது.

- மு.முகமது பாட்சா*
03/06/2019

No comments:

Post a Comment

Popular Posts