அழகிய முன்மாதிரி - ரமலான் 27

கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள்
அழுக்கு என்பது உடைகளில் இருக்கலாம்
உள்ளத்தில் இருக்கக் கூடாது...
அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மத்துலில்லாஹி வ பரக்காத்தஹூ
அழகிய முன்மாதிரி
புன்னகைதான் உறவுகளின் முதல் வாசல்
கதவுகளை மூடி வைக்காதீர்கள்
காற்றில்லாமல் ஈமான் இறந்துவிடும்...
சோதரனின் கரங்களை முத்தமிடுங்கள்
ஈரம் இதயத்தில் பாயட்டும்...
உறவுகளின் வாசல்களைத் தட்டுவது
கையேந்துவதற்கல்ல...
கைகளோடு கைகளைப் பிணைப்பதற்காக....
கண்கள் சிரிக்கட்டும்
வார்த்தைகளில் நறு மணம் வீசும்...
ஏழையென்பது இங்கு யாரும் கிடையாது...
வசதியென்பதுதான்
இம்மையில் நழுவி விடும் இளம் காற்று...
ரோஜாக்களின் தோட்டத்திலா
முட்களை ரசித்துக் கொண்டிருப்பீர்கள் ?
வாழ்த்துகள் சொல்லுங்கள்
வாசம்
வாசற்கதவை அகலத் திறந்து வைக்கட்டும்...
- மு.முகமது பாட்சா*
04/06/2019

கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள்
அழுக்கு என்பது உடைகளில் இருக்கலாம்
உள்ளத்தில் இருக்கக் கூடாது...
அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மத்துலில்லாஹி வ பரக்காத்தஹூ
அழகிய முன்மாதிரி
புன்னகைதான் உறவுகளின் முதல் வாசல்
கதவுகளை மூடி வைக்காதீர்கள்
காற்றில்லாமல் ஈமான் இறந்துவிடும்...
சோதரனின் கரங்களை முத்தமிடுங்கள்
ஈரம் இதயத்தில் பாயட்டும்...
உறவுகளின் வாசல்களைத் தட்டுவது
கையேந்துவதற்கல்ல...
கைகளோடு கைகளைப் பிணைப்பதற்காக....
கண்கள் சிரிக்கட்டும்
வார்த்தைகளில் நறு மணம் வீசும்...
ஏழையென்பது இங்கு யாரும் கிடையாது...
வசதியென்பதுதான்
இம்மையில் நழுவி விடும் இளம் காற்று...
ரோஜாக்களின் தோட்டத்திலா
முட்களை ரசித்துக் கொண்டிருப்பீர்கள் ?
வாழ்த்துகள் சொல்லுங்கள்
வாசம்
வாசற்கதவை அகலத் திறந்து வைக்கட்டும்...
- மு.முகமது பாட்சா*
04/06/2019
No comments:
Post a Comment