
பூச்செடியைப் பறித்து வந்து
கொத்துகளில் இணைத்து விட்டீர்கள்...
பூக்கள் அழகானதென்பது மாயப் பிம்பம்
பூங்கொத்து
சாடி தொட்டிக்கு இடம் பெயர்ந்துவிட்டது
வாசம் சாடிக்குள் பரவி நிற்க
நீங்களே அதை உடைக்கிறீர்கள்
நீங்களே அதனை ஒன்றும் சேர்க்கிறீர்கள்...
உங்களின் ரசனை வித்தியாசமானது...
வெளிச்சம் என்றீர்கள்
நான் விளக்கிற்கு மாறிக் கொண்டேன்...
இப்போதும் நீங்கள்
அடிக்கடி தேய்க்கும் போது
ஆலம்பனா என்று மண்டியிட்டு நிற்கிறேன்..
அடிமை ஆடைகளைக் களைந்து
அர்ப்பணமாகிறது...
உங்களின் ரசனை
விந்துகளின் வழியே ஒழுகி நாற்றமெடுக்க...
கள்ளப்பருந்தின் நகங்களுக்கு
சாயம் பூசிக் கொண்டிருக்கிறேன்.
- மு. முகமது பாட்சா*
26/06/2019
No comments:
Post a Comment