
தோற்றலென்பதோர் குறுகிய சந்து
நுழைந்து நெளிந்தோடும்
சாக்காட்டைக் கடந்து
மீள்வதே மறு ஜென்மம்...
தோல்வி பிழையெனக் கொண்டால்
பிறப்பின் தகுதியும் கேள்விக்காளாகும்...
வாழ்தலே வாழ்வின் தகுதி...
இடறுதலென்ப இடை நிறுத்தலல்ல
இடையின் வலி பொறுத்தல்....
தோற்றலென்பதின் தொடுகுறி
வஞ்சம் கோர்த்த வகையிலும் சாரும்...
வஞ்சமறுக்க வஞ்சம் கோர்
வாழ்வதில் மிச்சம் எஞ்சி நிற்கிறது
வெற்றியின் கணக்கு.
-மு. முகமது பாட்சா*
06/06/2019
No comments:
Post a Comment