
முதலில் அவன்
சாதாரணனாகத்தான் உள்ளே வந்தான்
பசிக்கிறது என்றான்..
பாவம் என்றவர்கள் பசியைத் துடைத்தார்கள்
ஆடையைக் கேட்டு
வாங்கி உடுத்திக் கொண்டான்...
ஆதரவாய் தங்க இடமும் தந்தார்கள்...
மறு நாள் அவன் துணையாகப்
பூனையொன்றும் வந்து படுத்துக் கொண்டது
எலிகள் இனி வராதென்றான்...
பாதுகாப்பதாய் சொல்லி
சாவியை வாங்கிக் கொண்டான்....
அவர்கள் திரும்பி வரும் போது
தெருவில் படுக்கைகளை விரித்தவன்
பத்திரமாகப் படுத்துத் தூங்குங்கள்
உள்ளே பத்தினி இருக்கிறாள் என்றான்.
- மு.முகமது பாட்சா*
10/06/2019
No comments:
Post a Comment