
யாரும் சாலையைச்
சரியாகக் கடப்பதில்லை
மோதிவிடும் வண்டிகளின் மீதுதான்
குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்
மிதிவண்டிகள்
நிதானமாகவே சென்று கொண்டிருந்தன
உதைவண்டிதான் இப்போது
வாழ்க்கையை உந்தித் தள்ளுகிறது...
அதற்குதான்
முதலில் பசியாற்றவேண்டும்...
வேகமென்பது
வீதிகள் நம்மை விழுங்கி விடுவது...
சாலையோரங்கள்
சந்தடியான சப்த கூட்டின் இருமல்
தொட்டு நகரும் பேருந்தில் எமன்
எட்டி பார்த்துவிட்டுச் சிரிக்கிறான்..
எல்லோருக்குமே இங்கு எள்ளல்தான்...
- மு.முகமது பாட்சா*
17/06/2019
No comments:
Post a Comment