Tuesday, 18 June 2019

கனவின் மொழி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

கனவின் மொழி என்னவாக இருக்கும்? 
கருப்பு வெள்ளை என்கிறது விஞ்ஞானம்... 
கனவின் மொழி 
சோதிடம்தான் என்கிறது ஆன்மீகம் 
சிறுப்பிள்ளைகளின் 
இளமுறுவலாகவும் அஃது இருக்கலாம்... 
தேவதைகள் விளையாடுகிறார்கள் 
எனச் சொல்கிறாள் பாட்டி... 
எருமை மாடுகள் விரட்டிய கனவில் 
நான் இன்னமும் 
ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன்... 
காதலுக்கான மொழியாகவும் 
கனவுகள் இருக்கலாம் 
அங்குதான் அவர்கள் நிம்மதியாகப் 
பேசிக் கொண்டிருக்கிறார்கள்... 
கனவென்பதே கல்லறைகளின் மொழியென்று 
தேசாந்திரி 
சொல்லிவிட்டுச் சிரிக்கிறான்... 
கனவுதான் குப்பைகளைக் கொட்டி வைக்கும் 
புதைகுழியென்று யாருக்குத் தெரியும்... 
கனவொன்று 
என்னை முத்தமிட்டு எழுப்புகிறது... 
கனவுகளுக்காக 
நானென்னை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

- மு.முகமது பாட்சா*
19/06/2019

No comments:

Post a Comment

Popular Posts