
சன்னலை அகலத் திறந்துவிட்டுக்
கவனிக்கிறேன்
வானம் கடலாக மாறியிருந்தது...
நிழல்களைப் பொறுக்கிக் கொண்டே
மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்...
வேர்கள் குளியல் போட எத்தனிக்கும்
குதுகலத்தில் மரங்களும் செடிகளும்
தலையாட்டி மகிழ்கின்றன...
சின்னக் காற்றிலுதிர்ந்தப் பூவொன்று
என் பார்வைப் பட்டு மோட்சம் போகிறது
பறவைகளின் மனதைப்
படித்த வார்த்தைகள் எந்தப் புத்தகத்தில்
ஒளிந்திருக்கும்?
சூடான தேநீரொன்றும்
எனக்குத் தேவைப்படவில்லை
நானே ஆறிப்போயிருக்கிறேன்...
என்னைச் சுற்றிலும்
எழுத்துகள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன..
- மு.முகமது பாட்சா*
07/06/2019
No comments:
Post a Comment