
முள் கிரீடத்தை அணிந்து
பிதாவிடம் மனம் உருகுகிறாள்...
வெள்ளை ஆடைக்குள் விரவும்
அழுக்கின் படிமங்களை
அவளால் துவைக்க முடியவில்லை....
கடவுளுக்குத் தூது போகும்
வேதஆகமம்
விரல்களுக்கிடையில் கெஞ்சிக் கொண்டிருக்கிறது...
மண்டியிட்ட பிரார்த்தனையில்
மெழுகுகள் உருகிக் கொண்டிருக்கின்றன...
சாத்தானை விலக்கிவிடும்
தேம்பும் விசும்பலைப்
பறவையாகப் பறக்கவிடுகிறாள்....
சிலுவையை இறக்கி வைத்தவளின் தேகத்தில்
ஆணிகளையடிக்கத் தச்சர்கள்
ஆலயத்தின் வெளியில் காத்திருக்கிறார்கள்....
காகமொன்று பறந்து செல்கிறது
சாத்தானின் கையில் வெள்ளிக் காசுகள்.
- முகமது பாட்சா*
27/06/2019
No comments:
Post a Comment