அமானிதம் - ரமலான் 26

மரங்களின் நிழலில்
படுத்துக் கொள்ளுங்கள்
மலைகளில் நடந்து
மேய்ச்சல் செய்யுங்கள்
ஓடைகளில் ஓளுவு செய்வது
அவ்வளவு அழகு
ஓலைகளை விரித்தும்
தொழுது கொள்ளலாம்
சுவனத்தை அருகில் வைத்து
நரகத்தைச்
சுவனமெனச் சுழல்கிறாய்...
அன்றையத்தேடல்கள் அற்புதமானது...
இரசிக்கத்தெரியாதவன்
இயற்கைக்கு எரியூட்டுகிறான்...
தேனீக்கள்
பூக்களை முத்தமிடுவதால்
அன்றைய பசி ஆறுதலடைகிறது...
இறந்து போன பறவையைப்
பாடம் செய்தாலும்
பறக்கவா போகிறது?
கல்லறையில் பூக்கள் பூப்பதும் வரம்...
கல்லாகக் கிடப்பவன்
பூமிக்குப் பாரம்....
மேகங்களென்றாலும் மழையாக
பூமிக்குத்தான் திரும்பும்...
மரங்களை வெட்டிவிட்டு
காற்றைக் காசு கொடுத்து வாங்குகிறாய்
மஹஷரின் வெப்பத்திற்கு
ஏசி போட
எதைச் சேர்த்து வைத்திருக்கிறாய்?
இருக்கும் சுவனத்தை அழித்துவிட்டு
மறுமைக்கு
எதைக் கொண்டு வழித் தேடுவது?
இயற்கை
இறைவன் கொடுத்த அமானிதம்.
- மு.முகமது பாட்சா*
03/06/2019

மரங்களின் நிழலில்
படுத்துக் கொள்ளுங்கள்
மலைகளில் நடந்து
மேய்ச்சல் செய்யுங்கள்
ஓடைகளில் ஓளுவு செய்வது
அவ்வளவு அழகு
ஓலைகளை விரித்தும்
தொழுது கொள்ளலாம்
சுவனத்தை அருகில் வைத்து
நரகத்தைச்
சுவனமெனச் சுழல்கிறாய்...
அன்றையத்தேடல்கள் அற்புதமானது...
இரசிக்கத்தெரியாதவன்
இயற்கைக்கு எரியூட்டுகிறான்...
தேனீக்கள்
பூக்களை முத்தமிடுவதால்
அன்றைய பசி ஆறுதலடைகிறது...
இறந்து போன பறவையைப்
பாடம் செய்தாலும்
பறக்கவா போகிறது?
கல்லறையில் பூக்கள் பூப்பதும் வரம்...
கல்லாகக் கிடப்பவன்
பூமிக்குப் பாரம்....
மேகங்களென்றாலும் மழையாக
பூமிக்குத்தான் திரும்பும்...
மரங்களை வெட்டிவிட்டு
காற்றைக் காசு கொடுத்து வாங்குகிறாய்
மஹஷரின் வெப்பத்திற்கு
ஏசி போட
எதைச் சேர்த்து வைத்திருக்கிறாய்?
இருக்கும் சுவனத்தை அழித்துவிட்டு
மறுமைக்கு
எதைக் கொண்டு வழித் தேடுவது?
இயற்கை
இறைவன் கொடுத்த அமானிதம்.
- மு.முகமது பாட்சா*
03/06/2019
No comments:
Post a Comment