Thursday, 13 June 2019

காய்ப் பிடித்திருக்கு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

வண்டின் கால்கள் 
என்னைத் தட்டிவிட்டுப் போகின்றன... 
மஞ்சள் பிசிறுகளோடு நீண்ட குழல் வீதியில் 
சறுக்கி வீழ்கிறேன்... 
ஆக்டோபஸ் திரவங்கள் சூழ்ந்துகொள்ள 
ஆதிப் புணர்ச்சியொன்று 
வியர்க்காமல் வினையாகிறது... 
சூல் பையின் வீக்கம் 
ஓர் இருட்டு அண்டத்தைச் சுமக்க... 
பூவின் மடல்கள் உதிர்ந்து விழுகின்றன... 
விவசாயி மகிழ்கிறான் 
ஆஹா! காய்ப் பிடித்திருக்கிறது.

- மு.முகமது பாட்சா*
13/06/2019

No comments:

Post a Comment

Popular Posts