எழுத்துப் பிழைக்காகிதம் - ரமலான் 25

ஒரு நரம்பின் நூலிழைப் பிரிகிறது....
'முடிந்தது'
என்று முற்றுப் புள்ளி வைக்கிறார்கள்...
நிழல் கலைஞன்
விரல்களினசைவை நிறுத்துகிறான்...
ஒரு பம்பரம் சுழல்வதை
நிறுத்திக் கொள்கிறது...
இறந்த எலிக்காகக் காகங்கள் கூடுகின்றன..
எழுத்துப்பிழைக் காகிதம்
எழுதாத வரிகளைச் சுமந்து செல்கிறது...
அரங்கை விட்டு
எல்லோரும் வெளியேறுகிறார்கள்...
எங்கிருந்தோ துவாக்களின் வாசனை
சுற்றி வருகிறது...
மண்ணறையின்
சன்னல்கள் திறந்து கொள்கின்றன.
- மு. முகமது பாட்சா*
02/06/2019
No comments:
Post a Comment