Tuesday, 25 June 2019

நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது - நுண்புனை கதைகள்

பாட்சாவின் நுண்புனை கதைகள்

நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது

நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது. கடவுளின் தேசத்தைக் குளிர்விக்க 
வறண்ட குளத்தில் நீர் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் பாட்டில் விற்பவன்
 தாகத்தோடுவே அலைகிறான்... மழை வர யாகம் , தொழுகையெல்லாம் 
நடந்து கொண்டிருக்க, தவளைக்குத் திருமணமும் செய்து கொண்டிருந்தார்கள்... 
மூத்திரம் குடிப்பதைப் பற்றிய ஒரு யோகியின் பதிவு, பற்றி எரிந்து கொண்டிருந்தது...
 அமைச்சரின் வீட்டிற்கு லாரியில் தண்ணீர் சென்று கொண்டிருக்க... 
தண்ணீர் குடம் படத்திற்கு, தண்ணீராய் செலவு செய்யத் தண்ணீர் ஊற்றி ஊற்றி 
கதையைத் தேடிக்கொண்டிருந்தார்கள்... இறைந்து கிடந்த பாட்டில்களின் 
மத்தியில் சில யோனிகள் கிழிந்து இறைந்து கிடந்தன... 
அவள் தாகத்தோடுவே அலைந்து கொண்டிருந்தாள்... அவள் வயிற்றில் பசி, 
சிசுவாய் அமர்ந்து உருட்டிக் கொண்டிருக்க...
நகரம் அழுக்காகிக் கொண்டிருந்தது.

- முகமது பாட்சா*
24/06/2019

No comments:

Post a Comment

Popular Posts