
நான் சற்றுமுன் தான்
காகமாக மாறியிருந்தேன்
கடற்காற்றில்
அழகான கருமுடி அலைபாய
அவளின்
விளையாட்டுப் பொம்மையாக
மாறி விட்டேன்...
நேசம் இதயத்தின்
நெருக்கத்தில் இருந்தாலும்
அச்சம் தூரத்தை
அளந்து வைத்திருந்தது...
இப்போது அவள் என்னைப்
பட்டமாகப் பார்க்கத் தொடங்கினாள்
அறுந்துவிழும் முன்
நானாகவே
என் நடையைக் கட்டுகிறேன்.
- மு. முகமது பாட்சா*
18/06/2019
No comments:
Post a Comment