
தொடங்கக் கூடாத இடத்திலிருந்து
வார்த்தைகள் வெளிவந்து விழுந்தன...
காதுகள்
கைகளால் தன்னை அறைந்து கொள்ள...
சுற்றிலும் முகம் சுளித்தவர்கள்
எச்சில் துப்பிவிட்டுப் போனார்கள்...
ஒரு வார்த்தையிலிருந்து
இத்தனை பன்றிகளா குட்டிப் போடும்?
அவன் உதடுகள்
மெல்லக் குழைந்து ஊளையிட...
ஆடைகளை அவிழ்த்து வீசியெறிந்தான்...
அவன் நிர்வாணம்
வார்த்தைகள் இல்லாமல்
மொட்டைக்கட்டையாக நடந்து சென்றது...
பிரபஞ்சம் பிரிந்து நழுவ...
நாகரீகத்தின் ஆடைகளில்
ஆங்காங்கே
அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருந்தன...
- மு. முகமது பாட்சா*
24/06/2019
No comments:
Post a Comment