
அந்த ஓவியம் என்னை வரைகிறது
வண்ணத்துகள்கள் என்மீது ஒட்டிக்கொள்ள
நான் பட்டாம்பூச்சியாக மாறுகிறேன்...
காற்றிலுதிர்ந்த வண்ணங்களைக்
களவாடிச் செல்கிறது பச்சோந்தியொன்று...
பச்சோந்தியின் பார்வையில்
சிக்கிக் கிடக்கும் பட்டாம்பூச்சி நானென்றால்...
கற்பனைகளும் ஆபத்தானது...
அந்த ஓவியம் என்னை வரைகிறது
நான் நானாக நடந்து செல்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
09/06/2019
No comments:
Post a Comment